Monday, January 23, 2012

KAVITHIGAL

வீடோ நிலமோ
விட்டுப் போயிருந்தால்
பங்கு பாகம் பிரிப்பதில்
சண்டையிருக்கும்


கடன் சமை
விட்டுப் போயிருந்தால்
தீர்ப்பதில்
சண்டையிருக்கும்


எதுவுமே
விட்டுப்போவதாக
முதாதையார் நினைவு
தை அமாவாசையில்
சடங்காக வந்து போகும்
இவனுக்கு

பாவம் அவர்கள்
இவனுந்தான்
வித்யாஷங்கர்



*துயரங்கள் சுமப்பவன்
வெகு துõரப் பயணம்
இளைப்பாறுதற்று


இலக்கை கொலைத்தவிட்டு
ஓட்டம்


யாரோ எதுவோ
துரத்துகிற அச்சம்

கானல்நீரில்
தாகம் தணிக்கும்
எத்தனம்


உப்புச் சாலையில்
கொப்பளிக்கும் கால்கள்

நதிகளையும்
பேரருவிகளையும் விழுங்கிய
பாலைப் பயணம்

ஒற்றைக் குயிலின்
சோக கீதம்

இன்னொரு உதயம்
இன்னோரு நாள்

இன்னொரு நாள்
இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
வித்யாஷங்கர்


*எனக்கு கிடைத்தது
இப்படி என்கிறான்


இருளிலிருந்தே
எடுத்தேன் என்கிறான்

வியர்வையில்
விளைத்த முத்து என்கிறான்

இருளில்
வியர்வையில்
வேரில் தேடியும்
கிடைக்காதவன்
சொல்கிறான்

இருந்தால்தானே கிடைக்க
இல்லவே இல்லை என்கிறாள்

வித்யாஷங்கர்

Thursday, January 19, 2012

நன்மைகோணங்கிக்கு போன் செய்தேன்
நகுலன் பேசினார் 
நகுலன் இருக்கிறாரா என்றேன் 
இல்லை என்றார் 

நெல்லையில் 
கல்யாண்ஜியும் 
விக்ரமாதித்யனும் 
பேசி முடித்து 
விச்ராந்தியாய் அமர்ந்திருந்தனர் 

முருகபூபதியும் 
கோணங்கியும் 
குருமலை போய்
மூலிகை தேடி போயிருப்பதாகவும் 
தேவதச்சன்  சொன்னார் 
கூடவே அந்த மூலிகை கிடைப்பது 
அவ்வளவு   எளிதில்லை 
மௌனி அதை உண்டதாகவும் 
தெரிவித்தார் 

எங்களது  பேச்சை 
ஜன்னல் வழியே 
சமயவேல்  பார்த்து கொண்டிருப்பதாக 
கலாப்ரியா சொல்லிவிட்டு 
வித்யாஷங்கர்  என்று அழைத்திருக்கிறார் 
என் காதில் விழாமல் போயிற்று 
அருவி  இரைச்சலில்....
===========வித்யாஷங்கர்