Friday, May 29, 2009

விளைந்துக்கொண்டேன் !

எங்கும் போக முடியாதபடி
யாரையும் பார்க்க முடியாதபடி
கட்டப்பட்டிருக்கிறது
என் காலகள்
குடும்பச்சங்கிலியால்

யாருடைய சந்தோஷமும்
யாருடைய துக்கமும்
பகிர்ந்துகொள்ளக்கூடிய
மனநிலையிலில்லை

எனது மேய்ச்சல் நிலங்கள்
முளைக்குச்சியில் அடித்த
கயிற்றின் நீளத்தில்
நிர்ணயிக்கப்பட்டுவிட்டது

விடுதலை வேட்கையோ
வெருண்டெழுவதோயில்லை

மேய்ச்சல் நிலங்களுக்குள்
விளைந்துக்கொண்டேன்
எனது பசியையும் கனவையும்

- வித்யாஷங்கர்
22/05/09

1 comment:

  1. சூழ்நிலைச் சங்கிலியின் கண் தெரியாத கண்ணிகளுக்குள் நானும் ஒருவன்...பாதித்த கவிதை...
    இன்னும் நிறைய கவிதைகளைப் பதிப்பியுங்கள் சார்...புகழ்ச்சியென எண்ண வேண்டாம்... ‘சாமக்கொடை’ கவிதை விகடனில் கண்டது முதல் உங்கள் வாசகன் நான். அடுத்த படைப்புகள் கண்டதில்லை. காண ஆவல்...வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன்...

    please remove 'word verification' sir... it will reduce the comments...

    ReplyDelete