Wednesday, March 10, 2010

சும்மா இருக்கேனாம்!

குழந்தைகளை
குளிப்பாட்டிஉடையுடுத்தி தயார் செய்து
பள்ளிக்கனுப்பி

உன்னை எழுப்பி
காபி கொடுத்து
குளிக்க வெந்நீர்வைத்து
டிபன் கொடுத்துதுடைத்து
லஞ்ச் தயாரித்துபேக்கில் வைத்து
வேலைக்காரியாய்...

உனது வயதான அம்மாவுக்கு
வேலைத்தவறாது
மருந்து மாத்திரை தரும்
செவிலியாய்...

குடும்பத்தார்அனைவரது
உடைகளையும்
சலவை செய்யும்
சலவைக்காரியாய்

உற்றார் உறவுகளின்
நல்லது பொல்லாதுக்கு
உன் வருவாயில்மனம் கோணாமல்
செலவழிக்கும்
அக்காவுண்டண்டாய் நிர்வாகியாய்...

இத்தனை வேலை பார்க்கும்
என்னைவிருந்தினர் முன்
அவங்க வீட்ல சும்மாதான் இருக்காங்கான்னு
எப்படிச் சொல்லமுடிகிறது
என் கணவா?
வித்யாஷங்கர்

3 comments:

  1. நன்றாக உள்ளது ஐயா.
    தமிழ் வீடு வலையில் ஏற்றப் படுமா?
    (என் போன்ற அயல் தேச வாசிகளுக்காக)

    ReplyDelete