Monday, June 8, 2009

சாமக்கொடை

பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது

"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

- வித்யாஷங்கர்
(ஆனந்த விகடன் முத்திரை கவிதை)

3 comments:

  1. தலைவரே வணக்கம்...நீங்கதானா அது..?
    8 வருஷத்துக்கு முன்னாடி நான் படிச்சு என் மனசுல இன்றும் (மனப்பாடமாக)நிற்கும் கவிதை இது..ஆ.வியில் கடைசிப்பக்கத்துல (அட்டைக்கு முன்னாடி) வந்த ஞாபகம். கவிதைக்கான படமும் இன்னும் என் மனதில்...உக்கிரத்தைக்காட்டும் முகமாய் குங்குமமும், அதையும் மிஞ்சும் காதலிக்கத் தூண்டும் விழிகளும்..தங்கள் கவிதையுடன் அப்படத்தையும் அப்போதே வரைந்து வைத்துவிட்டேன். பிறிதொரு நாளில் பதிவிட எண்ணி இருந்தேன். நீங்களே கவிதையைப் போட்டு விட்டீர்கள் நன்றி சார்,,,

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப சந்தோசம்.நன்றி.

    ReplyDelete
  3. அருமையான கவிதை கவிஞர்.வித்யாஷங்கர்....:)

    ReplyDelete