Friday, June 29, 2018


ஆவிகளோடும் வாழ்ந்தாச்சு
ஆச்சர்யப்படச் சொல்லவில்லை
அனுபவ உண்மை

மாண்டு போன
அத்தையை செப்புத்தகட்டில்
மாந்த்ரிகம் எழுதிவைத்து
ஆண்டுக்கொருமுறை
வந்து உறவுகளோடு
உலவவிட்டார் பொன்னையா சித்தப்பா

கைகால் இழுத்து
வாய் கோணி
பீடிக்கட்டை எடுத்து
மடிசுருட்டி
டீக்குடித்து பிள்ளைகளை
ஆசிர்வதித்துப் போனார்
செத்து பல வருடமாகியும்

அப்பத்தா ஆத்தா
அப்பா பெரியப்பா
பெரியம்மா
தட்டுப்படுவதேயில்லை
கனவிலும்

எந்நாளும் மறவாத
அம்மாவும்
அண்ணியும்
இக்கட்டில் இருளில்
துனை நிற்பது
இப்போதும் தொடர்கிறது
என்னோடு
-    வித்யாஷங்கர்

            சொற்றுனை  வாழ்க்கை

சொல்லிச் சொல்லி
சொல்லால்
வயிறு நிரப்பி

சொல்லை
எழுத்தாக்கி
தொழில்

சொல்லை
என்னவெல்லாம்
செய்தாலும்

சொல்தானே
சொத்து
கவிக்கு

சுருக்கமாகச் சுவையாக
சொல்லத்தெரியாமல்
அவையோரை
எழுத்து போகவைக்கிறார்கள்
தன் சொல்லை
தானே வியந்து

பொருள் பொதிந்த
சொல்லென்றால்
கேட்போரை
சுண்டியிழுக்கும்
விருதாப் பேச்சு
கொட்டாவி விடவைக்கும்

சொல்லுக சொல்
வெல்லும் தன்மையறிந்து
       -  வித்யாஷங்கர்






           கவலைக்காரி

அலுவலகம் செல்லும்
மகனுக்கு
ஏதேனும் செய்து
கட்டிக் கொடுப்பாள்

அவனுக்கு
காலை உணவளித்து
முடிப்பாள்

துணி துவைத்து
பாத்திரம் தழுவி
குளித்து முடிப்பாள்

அப்புறம்
அப்புறம்
இருவரும் வீடு திரும்பும்வரை

மகள்நகையை
திருப்பவேண்டும்

உடல்நலமில்லாத பெரியம்மா
திடீர்ச் செலவு வைக்காமல்
பிழைத்திருக்க வேண்டும்



வட்டிக்கடன்
பாத்திரக் கடன்
பலசரக்கு கடன் என
அடுக்கடுக்கான
கடன் கவலைகளோடு
காளிக்கான
நேர்த்திக் கடனை
இந்த வருசமாவது
செய்து முடிக்க வேண்டும்


என்று முடிவெடுக்கும் போது
இருண்டிருக்கும்
வீடு விளக்கேற்ற
இருவரும்
எப்போது திரும்புவார்களோல்….சமையல்
எனனை செய்யலாம் என்று கவலைகளோடு
இன்னொரு கவலை தொற்றிக்கொள்ளும்.
                         -  வித்யாஷங்கர்


   


வருவோம்
வாழ்ந்த காடு இழந்த சிங்கங்களே

வசந்தம் வரும்
வாசல்தேடி
நதிவரும்
பூ வரும்
சூர்யோதம் வரும்

வரும் வரும் வரும்
வரம்  வரம்  வரம்
           - வித்யாஷங்கர்

 

No comments:

Post a Comment