Sunday, March 14, 2010

கவிதையே ஆகச்சிறந்த வடிவம் விக்ரமாதித்யன்

இலக்கியத்தில் பல்வேறு வடிவங்கள் சிறுகதை, நாவல் கட்டுரை என்றிருக்க கவிதை எப்படி வேறுபடுகிறது?
கவிதை என்பதுதான் ஒவ்வொரு மொழியிலும் எழுதப்பெற்ற ஆதிவடிவம். அதற்கும் முன்பாக நாட்டுப்பாடல்கள் இருந்திருக்கின்றன. அவை எழுதப்படவில்லை. முதல்வடிவம் என்பது ஒரு சிறப்பு. கவிதையின் சொற்செட்டு அதன் மகத்தான விஷேசம். எடுத்துக்காட்டாக கனியன் பூங்குன்றனாரின் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற வரிகள் சொல்வதை உரைநடையில் குறைந்தது ஐந்து வாக்கியங்களில் சொல்லியாக வேண்டும். செம்புலப் பெயல் நீர்போல அன்புவிட நெஞ்சம் தான் கலந்தனவே என்ற ஆண் பெண் வாழ்வின் சாரத்தை இவ்வளவு அழகாக இவ்வளவு சிக்கனமாக உரைநடையில் சொல்லிவிட முடியும் என்று நம்புகிறீர்களா? மாதவி தாய்மீது கோவலன் கொண்டிருந்த மாறாத காதலை சொல்லும் போது அடிகள் எழுதுகிறார் விடுதல் அறியா விரும்பினள் ஆயினள் என்று கவிதையில் மட்டும் தான் கவிஞர் இவ்வளவு சரியாக இவ்வளவு நுணுக்கமாகச் சொல்லமுடியும். கண்ணகித் தாயையும் கோவலனையும் கவுந்தியடிகள் அடிகள் காட்டு வழியில் கூட்டிச் செல்லும்போது எதிர்ப்பட்ட விடலைத்தனமான ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் யார் இவர்கள் என்று கேட்க, கவுந்தியடிகள் எம்மக்கள் என்று சொல்ல மக்களெனில் கணவன் மனைவியாக இருக்க முடியுமா என்று கேலியாகப் பேசியவுடன் கவுந்தியடிகள் சினங்கொண்டு சிறு நரிகளாகும்படி சபித்து விடுகிறார். கண்ணகித் தாய் கூறுகிறாள் நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமையென்றே அறிதல் வேண்டும் என்று சமாதானப்படுத்தி சாப விமோசனம் அருளச் செய்விக்கிறார். இந்த இரண்டு வரிகள் சொல்கிற சாராம்சத்தை பத்தி பத்தியாக எழுத வேண்டும் உரைநடையில். அவ்வளவு ஏன் சிலப்பதிகாரத்திலே உரைநடையில் எழுதியிருந்தால் அன்னாகரினா அளவுக்கு எழுத வேண்டியிருக்கும். கவிதை என்பது சுருங்கச் சொல்லல். நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் என்ற வரிகள் கவிதையில் தவிர வேறு வடிவில் சொல்ல முடியாது. சொன்னாலும் சுவையோ, சிறப்போ இருக்காது. திருநாவுக்கரசு சுவாமிகளுடைய இன்னும் இரண்டு வரிகள் அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை என்ற கம்பீரமான வாக்குமூலத்தை கவிதையில் மட்டும்தான் சொல்லியிருக்க முடியும் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய்தான் தித்திருக்குமோ என்ற அழகுபட்ட கற்பனை கவிதை வடிவில் தான் வெளிப்பட முடியும். முன்னையிட்ட தீ முப்புறத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே நானும் இட்ட தீ மூள்க மூள்கவே என்று தாயின் இழப்பை பட்டினத்தடிகள் பாடுவதை கவிதை வடிவில் தவிர கனகச்சிதமாக இவ்வளவு கூர்மையாக வேறு எதிலும் எழுதியிருக்க முடியாது. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதுகிறார் விளையாட்டுப் போல ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் இந்த வரிகள் தருகிற அனுபவத்தை வேறு எந்த வடிவத்தில் தரமுடியும்? கண்ணன் மனநிலையை கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் என்று பாரதி எழுதுகிற காதல்பாட்டு வரிகளை எப்படி சொல்ல முடியும்.கண்ணதாசன் எழுதுகிறார் தமிழ்த்தாய் வாழ்த்தாக எழுதுகிறார் உன்னை நான் வணங்குவதும் என்னை நீ வாழ்த்துவதும் அன்னை மகற்கிடையே அழகில்லை என்பதனால் உன்னை வளர்த்த ஒண்டமிழ்சேர் புலவர் தம்மை வணங்குகிறேன் என்று. இந்த வரிகள் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் நினைவில் இருக்கிறது என்றால் கவிதை செய்யும் மாயம். இரண்டாயிரம் பக்க நாவல்கள் ஆயிரத்து இருநூறு பக்க நாவல்கள் என்றெல்லாம் தமிழில் வந்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆகச்சிறந்த சங்கப்பாடல்கள் சிலப்பதிகாரம் ஆண்டாள் பெரியாள்வார் பாசுரங்கள் திருநாவுக்கரசரின் துடிகொண்ட தமிழ் ஜெயங்கொண்டான், திரிகூட ராசப்பக்கவிராயர், குமரகுருபர சாமிகள் இவற்றைத் தாண்டி தமிழ் நவீன இலக்கியம் ஒன்றும் வளர்ந்து விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதை என்பது செறிவு, அடர்த்தி, சாரம், நுட்பம் எல்லாமும்தான். ஆக கவிதை என்பது மொழியிலேயே உயரிய ஓர் வடிவம். கவிஞர்கள் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள். நவீன கவிதைகள் கூட பிரமில் நகுலன், தேவதேவன், கலாப்பிரியா, தேவதச்சன், சுகுமாரன், ஆத்மானம், ஞானகூத்தன், யூமாவாசுகி, சமயவேல் என்ற முன்வரிசையை தொடர்ந்து இளையதலைமுறையில் யவனிகாஸ்ரீராம், பிரான்சிஸ் கிருபா, லட்சுமி மணிவண்ணன் ஆகியோர் கவிதைகளைப் படிக்கிறவர்கள் கவிதை தான் சிறந்த வடிவம் கவிஞன் தான் ஆகச்சிறந்த படைப்பாளி என்பதை உணர முடியும்.
சந்திப்பு: வித்யாஷங்கர்

Wednesday, March 10, 2010

என்ன அநியாயம் பாருங்கள் நித்தியானந்தரை விட கேவலமாக சாருநிவேதிதாவை குமுதம் வாசகியை கை வைத்ததாக சமிபத்தில் தான் எழுதியிருந்தது.இப்போது சாருநிவேதிதா குமுதம் ரிப்போர்ட்டரில் நித்தியானந்தரை பற்றி தொடர் எழுதப் போகிறராம்.போங்கடா நிங்களும் உங்கள் பத்திரிக்கை தர்மமும்

சும்மா இருக்கேனாம்!

குழந்தைகளை
குளிப்பாட்டிஉடையுடுத்தி தயார் செய்து
பள்ளிக்கனுப்பி

உன்னை எழுப்பி
காபி கொடுத்து
குளிக்க வெந்நீர்வைத்து
டிபன் கொடுத்துதுடைத்து
லஞ்ச் தயாரித்துபேக்கில் வைத்து
வேலைக்காரியாய்...

உனது வயதான அம்மாவுக்கு
வேலைத்தவறாது
மருந்து மாத்திரை தரும்
செவிலியாய்...

குடும்பத்தார்அனைவரது
உடைகளையும்
சலவை செய்யும்
சலவைக்காரியாய்

உற்றார் உறவுகளின்
நல்லது பொல்லாதுக்கு
உன் வருவாயில்மனம் கோணாமல்
செலவழிக்கும்
அக்காவுண்டண்டாய் நிர்வாகியாய்...

இத்தனை வேலை பார்க்கும்
என்னைவிருந்தினர் முன்
அவங்க வீட்ல சும்மாதான் இருக்காங்கான்னு
எப்படிச் சொல்லமுடிகிறது
என் கணவா?
வித்யாஷங்கர்