வீடோ நிலமோ
விட்டுப் போயிருந்தால்
பங்கு பாகம் பிரிப்பதில்
சண்டையிருக்கும்
கடன் சமை
விட்டுப் போயிருந்தால்
தீர்ப்பதில்
சண்டையிருக்கும்
எதுவுமே
விட்டுப்போவதாக
முதாதையார் நினைவு
தை அமாவாசையில்
சடங்காக வந்து போகும்
இவனுக்கு
பாவம் அவர்கள்
இவனுந்தான்
வித்யாஷங்கர்
*துயரங்கள் சுமப்பவன்
வெகு துõரப் பயணம்
இளைப்பாறுதற்று
இலக்கை கொலைத்தவிட்டு
ஓட்டம்
யாரோ எதுவோ
துரத்துகிற அச்சம்
கானல்நீரில்
தாகம் தணிக்கும்
எத்தனம்
உப்புச் சாலையில்
கொப்பளிக்கும் கால்கள்
நதிகளையும்
பேரருவிகளையும் விழுங்கிய
பாலைப் பயணம்
ஒற்றைக் குயிலின்
சோக கீதம்
இன்னொரு உதயம்
இன்னோரு நாள்
இன்னொரு நாள்
இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
வித்யாஷங்கர்
*எனக்கு கிடைத்தது
இப்படி என்கிறான்
இருளிலிருந்தே
எடுத்தேன் என்கிறான்
வியர்வையில்
விளைத்த முத்து என்கிறான்
இருளில்
வியர்வையில்
வேரில் தேடியும்
கிடைக்காதவன்
சொல்கிறான்
இருந்தால்தானே கிடைக்க
இல்லவே இல்லை என்கிறாள்
வித்யாஷங்கர்