அரசியல், கட்சி வேறுபாடு, கொள்கை மாறுபாடு எல்லாவற்றையும் தாண்டி ஒரு சரியான, தகுதி வாய்ந்த, அப்பழுக்கற்ற, தனிநபர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிற, நாலு பேருக்கு நல்லது செய்வதை தினசரி கடமையாக கொண்டு இயங்கி வருபவர், கொளத்தூர் அதிமுக வேட்பாளர் சைதை சா.துரைசாமி.
தேனி பகுதி கம்யூனிஸ்ட் முழு நேர ஊழியராக இருந்து தற்சமயம் விலகி யிருக்கிற தோழர் ஒருவரின் 24 வயதான மகனுக்கு தினமும் 600 ரூபாய்க்கு மருந்து, மாத்திரை தந்தால் ஒரு மாதத்தில் உயிரைக் காப்பாற்ற முடியும் நிலைமை.
என்னிடம் அந்த தோழர் வந்து முறை யிட்டார். முன்பின் நேரடியான அறிமுகம் இல்லாத சைதை சா.துரைசாமி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி மருத்துவ சான்றிதழ்களை இணைத்துக் கொடுக்கும் படி வழிசொல்லி தோழரை அனுப்பி வைத்தேன்.
மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய என்னை அந்த தோழர் இருமுறை தேடி வந்து போனதாகச் சொன்னார்கள்.
உதவி கிடைக்கவில்லையோ, வேறு மாற்று என்ன என்று யோசித்தேன்.
அந்த தோழர் தன் மகனோடு வீட்டிற்கு வந்தார். ""மாமாதான்டா உனக்கு எல்லாம்'' என்று மகனிடம் சொல்லி கைகூப்பினார்.
என்ன என்னு விவரம் கேட்டேன்.
சைதையார் மருத்துவமனை பேரில் மொத்த மருத்துவச் செலவுக்கான தொகைக்கும் காசோலை கொடுத் திருந்ததை தோழர் காட்டினார்.
சிறிது நேரம் இருவரிடம் பேசி அனுப்பி விட்டு யோசித்தேன்.
கட்சி வேறுபாடு பார்க்காமல் அந்த தோழரின் மகனுக்கு சைதையார் உதவியது, பகைவனுக்கருள்வாய் அருள் நெஞ்சே என்ற வரிகளை நினைவூட்டியது.
தமிழகத்தில் முதுமையில் வாடும் பத்திரிகையாளர்கள் 20 பேருக்கு மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கி வருகிறார்.
பள்ளிக் கட்டணம் கட்ட முடியாதவர் களுக்கு கட்டண உதவி, பேருந்து கட்டணம் கட்ட முடியாதவர்களுக்கு உதவி, இப்படி எத்தனையோ உதவிகளை வெளித்தெரியாமல் செய்து வருகிறார்.
குடிப்பழக்கமுள்ள பத்திரிகையாளர்கள் ஒரு வருடம் குடியை நிறுத்தினால் தங்க மோதிரம் வழங்கி வருவது, அவரது மனித நேயத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.
தமிழகத்தின் வருங்காலத்தை கணக்கி லெடுத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பதற் காக இலவச பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
எல்லோரையும் போல பத்திரிகை நடத்தியோ, சேனல் நடத்தியோ மேலும் பணம் சேர்க்காமல் சிறுகச் சிறுக சேர்த்ததை வாரி வழங்கிவரும் வாழும் கால வள்ளல் சைதையார்.
"நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை'
சைதையார் சட்டமன்றம் செல்வது கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல.
தமிழக மக்களுக்கே நல்லது, நல்லது செய்யும், அந்த சந்தர்ப்பம் கொளத்தூர் வாக்காளர்களுக்கு இப்போது கிடைத் திருக்கிறது.
தவற விடாது செய்யுங்கள்.