எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள்.
ஆனால் சினிமா பாடலுக்கு கண்தான் பிராதானம்
“கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்”
“கண்களிரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்டவெளியாக”
“கண்ணும் கண்ணும் கலந்து
இனபம் கொண்டாடுதே”
“என் கண்கள் செய்த பாவம்
உன்னை பார்த்தது”
“கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே”
“கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ?”
“கண்களே கண்களே
காதல் செய்வதை விட்டுவிடுங்கள்”
“விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது”
“விழியே கதை எழுது”
“விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”
“விழியே விழியே
உனக்கென்ன வேலை”
“கண்ணுக்குள் நூறு நிலவா
இதுவொரு கனவா?”
“பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?”
“பார்த்தால் பசிதீரும்”
“ஓறாயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்”
“கண்படுமே பிறர் கண் படுமே
நீ எதிரே வரலாமோ”
“கள்ள விழி பார்வையிலே
காணும் இன்பம் கோடிப்பெறும்”
“கண்ணே கலைமானே”
“கண் கவரும் சிலையே
ஒரு பக்கம் பாக்குறா”
“ஒரு கண்ணை சாய்க்குறா
கண்ணிலே நீர் எதற்கு”
“கண்ணும் கண்ணும்
கொள்ளையடித்தால்”
“உன்து விழியில்
எனது பார்வை
உலகை காண்பது”
“உன்விழியும் என்வாளும்
சந்தித்தால்”
“சுட்டும் விழிச்சுடர் தான்
கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக்கரியவிழி”
“பூவிழி வாசலில்
யாராடி வந்தது கிளியே கிளியே”
“கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு”
இதெல்லாம் ஒரு நிமிடத்திற்குள் ஓடி வந்த கண் வெள்ளம். இதுபோக உங்களுக்கு எத்தனையோ நினைவுக்கு வரலாம். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Tuesday, November 16, 2010
Monday, November 1, 2010
வாசி, சுவாசி
* மனிதனின் தெய்வீகத் தன்மையை யார் நம்ப முடியாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் கிரியா திறவு கோலின் உபயோகத்தினால் கடைசியில் தங்களிடமே முழு தெய்வீகத்தை தரிசிப்பார்கள்.
*உடலுக்கும் ஆத்மாவிற்கும் சூட்சுமமான தொடர்பாக உதவ வேண்டும் என்பதற்காக இறைவன் படைத்தானென்று ஹீப்ரூ தீர்க்கதரிசிகள் நன்கு அறிந்திருந்தார்களென்பதை பைபிளில் அடங்கியுள்ள சில பாகங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆதியாகமம் கூறுகிறது “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்”.
மனித உடலில் ரசாயன மற்றும் உலோகப் பொருட்களினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதே பொருட்கள் பூமியில் மண்ணிலும் உள்ளன.
தெளிவு பெறாத மனிதர்களில், ஆத்மாவினால் உயிரோட்ட சக்தியானது, சுவாசம் (சக்தியின் வாயு நிலை) என்ற கருவியின் மூலமாக உடலுக்கு மாற்றப்படாவிட்டால் மனிதனின் வெறும் தசைப்பிண்டம் எந்த வேலையையும் செய்வதோ, சக்தி மற்றும் அசைவை வெளிப்படுத்துவதோ என்றுமே முடியாத காரியம். மனித உடலில் ஐந்து வித பிராணனாக அல்லது சூட்சுமமான உயிர் சக்தியாக செயல்படும் உயிரோட்டங்கள் எங்கும் நிறை ஆன்மாவினுடைய ஓம் அதிர்வலையின் வெளிப்பாடேயாகும் (ஒரு யோகியின் சரிதம், பரமஹம்ஸ யோகானந்தர்)
*சும்மா இருத்தல் என்பது முடங்கிப் போவதோ, சோம்பி இருப்பதோ அல்ல. சக்தியை கண்டபடி செலவிடாமல் தேவைக்கேற்ப செலவிட செய்யப்படும் சேமிப்பு. மனதை சும்மா இருக்கச் செய்து ஸ்டெபிளைஸர் போல சக்தியை நெறிப்படுத்துவது.
*சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலோ மாற்றம் காண்பதுண்டோ? இதையே கர்ம யோகா என்கிறார்கள்.
கத்தரிக்காய் வெட்டினாலும்
கவிதை எழுதினாலும்
கழிப்பறை கழுவினாலும்
கடவுளை வழிபட்டாலும்
சிந்தனையையும் செயலையும் ஒரு சேரக் குவிப்பதே கர்ம யோகம்.
“மோட்சத்தை அடைய கடவுளை
வேண்டுவதை விட; கால்பந்தாடி
சுலபமாக அடைந்துவிடலாம்” என்றார்
விவேகானந்தர்.
“ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
No peace of mind"
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
இப்படி அலைக்கழிக்கப்படுபவர்கள்
இந்த பாபா எனும் சமுத்திரக்கணையில்
சற்றே அமர வாய்ப்புக் கிடைத்தால்
No peace of mind" என்கிற
நிம்மதியை நிமிடத்தில் அடையலாம்
அப்படி அடைந்த அனுபவத்தில்
சொல்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)