நேற்று உதித்தவள்
என்னோடு எப்போதும்
தோள் உரச நடந்தவள்
எனக்குள்
இதயத்துடிப்பாய் இயங்கியவள்
எங்கே தொலைத்தீர்
பெரும் பாவம் செய்தீர்
அஜ்யன் குற்றச்சாட்டு
அவள் சிறுமி,பேரிளம்பெண்
சிநேகிதி ,தாயுமானவள்
விட்டு விலகி
வேடிக்கை காட்டுகிறாள்
தேடி தவிக்கிறேனா
மறக்காமல் இருக்கிறேனா
மயக்கத்தில் கிடக்கிறேனா
மரணித்து விட்டேனா
அச்தமித்ததுபோல காட்டி
உதித்து விட்டாள்
நேற்று
இனி அவளை
தவற விட மாட்டேன்
எப்போதும்
வித்யாஷங்கர்
அஜயன் பாலாவுக்கு