மனசின் பேச்சு; வெட்டவெளிக்காற்று;
குழப்பம் தெளிய வரையும் சொற்கோலம்
குழப்பத்தில் விளைத்த சொற்கோலம்
வார்த்தை அலைகளை
வரிகளுக்குள் அடைக்கும் பிரயத்தனம்
மனதைக் கொட்டிக்காட்டும்
சொற் கண்ணாடி.
நேரில் சொல்ல முடியாததை
சொல்லும் சூட்சமம்
நுட்பம் கண்டு வியந்த
தருணத்தின் சொற் செட்டு
இப்படியுமா? அப்படியுமா?
என்பதை பகிரங்கமாக
முன்வைக்கிற ஆவணம்.
குழந்தையின் கைதட்டல்
குமரியின் நாணம்
அருவியின் தண்மை
நதியின் சிலிர்ப்பு
இலையின் பச்சையம்
சர்க்கஸோ
சாகசமோ அற்ற
சொல் விளையாட்டு
இழப்பின் சோகம்
இருப்பின் வாதை
சூழலின் மூச்சுத்திணறல்
உறவுகளின் அபத்தம்
உணர்வுகளின் கும்மி
எல்லாமான
எதுவுமற்ற
நவீன ஓவியம்
தோர்த்தவனறிவான்
தெளிவு
தேடத்தேட ஓடி ஓழியும்
கண்ணாமூச்சி
தேடாமல் தோள் தொற்றும்
பட்டாம்பூச்சி
மூச்சுப் பிடித்து
மூழ்கியவர்கள்
முத்தெடுக்கிறார்கள்.
சிலருக்கு ஜிப்பி
சிலருக்கு சோழி
எல்லோருக்கும் கிடைக்கும்
ஏதோவொன்று
..................
சங்கப்பலகை
தென்கோடி தமிழகத்தின்
அய்யர் சங்கப்பலகை
அவருக்குப்பின்
அதிகார பீடமாகி
கல்லாப் பெட்டியாய் கலகலக்கிறது
அய்யங்கார் சங்கப்பலகை
அவரோடு அழிழ்ந்தே போனது
கார்ப்பரேட் சங்கப்பலகைகள்
மார்க்கெட்டிங் யுத்திகளில்
மனச்சாட்டியை விற்று
மாட்டிக் கொண்டு முழிக்கிறது
காட்டுப் பூக்கள்
கடைக்கு வருவதில்லை
விற்பனைக்கு
நாலாம் தமிழ்ச்சங்கம் கண்ட
பாண்டித்துரைத் தேவரின்
கொடையாக
கிடைக்கிறது
அபிதான சிந்தாமணி
..................
No comments:
Post a Comment