கவிஞர்கள் குடிக்கிறார்கள்
கொண்டாடுகிறார்கள்
கலகம் விளைவிக்கிறார்கள்
சராசரி வாழ்க்கையை
குலைக்கிறார்கள்
எல்லோரையும்
ஏற்றுக் கொள்ள மறுத்து
விமர்சிக்கிறார்கள்
சிலர் அதிகார பீடத்தை அணுக
கூச்சமற்று
அலங்கார வார்த்தைகளை
அள்ளி இறைக்கிறார்கள்
அல்லது
அநியாயங்களை
கண்டு கொள்ளாமல்
வாய் பொத்திக் கிடக்கிறார்கள்
கவிஞர்கள் என்பது
பொதுமை
பண்முகப் பொதுமை
எப்போதேனும்
மக்களின் மனசாட்சியாய்
சில நல்ல கவிதைகளையும்
எழுதி விடுகிறார்கள்
இப்படிச் சில
உல்லாச புருஷர்கள்
இருந்துவிட்டுப் போகட்டுமே
யாருக்கும் எவருக்கும்
எதற்கும் உதவாமல்
பகவான் சொன்னது போல்
பலனை எதிர் பாராது
கடமைச் செய்கிற
பாவப்பட்ட கவிஞர்கள்
No comments:
Post a Comment