Thursday, December 23, 2010

பெயர் தெரியா பூ பூத்தது

என் மேஜையில்

திடீரென முளைத்த

செடியில்

பெயர் தெரியா பூ பூத்தது



எனது தாடியில்

படிந்தது பச்சையம்



திடிர்ச் செடிக்கு

ஒரு பெயரும்

பூவுக்கு ஒரு பெயரும்

யாரேனும் சொல்லுங்கள்

........



நதியொன்று

சாலையைக் கடக்க முயன்று

தோற்று பின் வாங்கியது



பூனை நதியைக் குடித்து

சாலையைத் தின்று

பறந்தது வானில்

சிறகில்லாமலே

........



தோட்டக்கள் நிறைக்கப்பட்ட

துப்பாக்கி முன்

ஏராளமான பிணங்கள்

சிலவற்றின் கையில்

தோட்டாக்கள் நிறைந்த

துப்பாக்கியும் இருந்தன

........



உன் பெயர் சொல்லி

அழைத்தேன்

நீ திரும்பி பார்க்கவில்லை

யாரோ திரும்பி பார்க்க

எனக்கு வேறுதிசை நோக்குவது தவிர

வழியில்லை

........



அந்த ஆடு பூவைத்தின்று

புழுக்கை போட்டது

பூக்களாய்



பூக்களின் வாசணையில்

பித்தான ஆடு

தலை தெறிக்க ஒடியது

காடு விடுத்து

........



அவளின் கை ரேகை

விரல்கள் தாண்டி வளர்ந்தது



இப்போதெல்லாம்

ரேகை

இன்னொரு விரலாக

மாறிவிட்டது அவளுக்கு

........



பேருந்தில்

பியானோவை வசித்தவன்

ஒட்டுநரில்லாமலே

வாகனத்தை

விரும்பியதிசைக்கு

செலுத்துகிறான்

எந்த விபத்தும் நேராமல்

........



அவன்

இவன் ஆனான்



இவன்

இவன் அவன் ஆனான்



எவன்

எவன் ஆனான்



யாருக்கும்

தெரியா பெருங் குழப்பம்

........





டைந்து

கிடக்

கிறது

நாற்

காலி



எப்போதோ

யாரோ

அமர்ந்தது

4 comments:

  1. //பேருந்தில்

    பியானோவை வசித்தவன்

    ஒட்டுநரில்லாமலே

    வாகனத்தை

    விரும்பியதிசைக்கு

    செலுத்துகிறான்

    எந்த விபத்தும் நேராமல்//

    எல்லா கவிகளும் அருமையா இருக்குங்க

    ReplyDelete
  2. அதற்குப் பெயர் “பூ”

    பூனைகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.. இருப்பினும் பூனைகள் சிலநேரங்களில் தேவைப்படுகிறன.

    எல்லாக் கவிதைகளும் அழகு

    ReplyDelete
  3. இறைந்துகிடக்கும் உங்கள் எழுத்துச் சோழிகளில் எல்லாச் சோழிகளும் அழகு...

    ReplyDelete
  4. thanku all ur comments. how can reply personally can u gide me?

    ReplyDelete