Monday, October 11, 2010

வேறு வேறு

நீங்களும் குடிக்கிறீர்கள் தான்

இருப்பினும்

நீங்களும் நானும்

ஒரே போல குடிகாரர்களில்லை



வாழ்தலின்

சந்தோஷத்திற்காக

சலிப்பை போக்க

நீங்கள் குடிக்கலாம்



தீராத் துயரத்தை

துடைக்க முடியாத அழுக்கை

உடலெனும் சுமையை குறைக்க

குடிக்கிறேன், நான்



குடிக்காமலே

மனிதனாக வாழவும்

முடிகிற கொஞ்சம்பேர்கள்

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்



எப்போதும் காய்நகர்த்தல்

வெற்றி வெற்றி

என்றொடும்

எந்தக் குதிரையையும்

எதிர் கொண்டு விடாமல்

பயமுறுத்துகிறது

வெறுமை



குடிப்பது பாவம் குற்றம்

கேவலம் இழிசெயல்

என்பதெல்லாம்

கடந்து போயிற்றுகாலத்தில்



குடிப்பதின் நோக்கம்

குடிப்பதாக மட்டுமே இருந்தால்

குழப்பத்திற்கிடமில்லை



‘ஓடும் நீருக்கும் உள்ள

உள்ளோட்டம்’

தள்ளாட்டம்

தடுமாற்றம்



நீங்களும் நானும்

குடித்தாலும்

ஒரேபோல குடிகாரர்களில்லை

நாம்.



                                                                                                          - வித்யாஷங்கர்

‘மதகுரு’ நூல் வெளியீட்டாளர் பாலகுருவுக்கு.

No comments:

Post a Comment