பரமஹம்ஸ யோகனந்தரின் ஒரு யோகியின் புத்தகம் இந்திய ஆன்மீக உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது.
இதை ஒரு புத்தகம் என்று மட்டும் கூறிவிட முடியாது. ஆன்மீகப் பெட்டகம்.
நவீன யுகத்தின் உபநிஷத் என்று பலர் போற்றியிருக்கிறார்கள்.
ரஜினியின் பாபா படத்தில் பட்டத்தை மந்திரத்தால் வரவழைப்பது போன்ற பல காட்சிகள் இதிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டிருக்கிறது மென்னையாக ரஜினி சாருக்கும், எஸ். ராமகிருஷ்ணனுக்கும் இருந்த ஆன்மீக வேட்கை அப்படி.
வடகிழக்கு இந்தியாவில் சோரக்பூரில் 1893ம் ஆண்டு ஜனவரி 5ல் பிறந்து 1915ம் ஆண்டு சன்னியாசம் பெற்றவர்.
1952 மார்ச் 7ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்ஜிலீஸில் மகா சமாதியடைந்தார்.
மனது மற்றும் ஆன்மாவின் ஜன்னல்களைத் திறக்கும் புத்தகம் என்று இந்தியா ஜர்னல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமஹம்சர் தனது குரு யுக்தேஸ்வர் பற்றி குறிப்பிடும் போது அன்புடன் இருக்க வேண்டிய விஷயங்களில் மலரைவிட மென்மையாகவும் கொள்கைகள் தவறும் சமயங்களில் இடியைவிட வலிமையாகவும் இருந்தார் என்று குறிப்பிடுகிறார்.
சில மனிதர்கள் மற்றவர்கள் தலையை வெட்டுவதன் மூலம் உயரமாகி விடலாம் என்று நினைக்கிறார்கள் என்பது குருவாக்கியம்.
தயவு செய்து இமயத்திற்கு செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள். தடையற்ற தனிமையில் தொடர்ச்சியாக தெய்வீகத் தொடர்பை அடைய எண்ணுகிறேன் என்கிறார் பரமஹம்சர்.
பதிலாக குரு யுக்தேஸ்வர் “இமயமலையில் பல மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் கடவுள் தரிசனம் கிடைக்கவில்லை.
ஞானத்தை அசைவற்ற மலையிடம் இருந்து தெரிந்து கொள்வதைவிட, ஓர் ஆத்ம ஞானியிடம் இருந்து தெரிந்து கொள்வதுதான் மிகவும் நல்லது” என்கிறார்.
குருதேவர் தான் ஆசிரியரே தவிர ஒரு மலை அல்ல என்பதை அவர் தெளிவாக குறிப்பிட்டார்.
யோகி ராம் கோபால் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்தார்.
இளம் யோகியே நீ உன் குருதேவரிடமிருந்து ஓடிவந்திருப்பதைச் காண்கிறேன். உனக்கு வேண்டியதெல்லாம் அவரிடமே உள்ளன. நீ அவரிடமே திரும்ப வேண்டும். மலைகள் உன் குருவாக இருக்க முடியாது இரண்டு நாட்களுக்கு முன்பு யுக்தேஸ்வர் கூறிய அதே கருத்து.
மகான்கள் மலைகளில் மட்டும்தான் வசித்தாக வேண்டுமென்ற பிரபஞ்சக் கட்டாயம் எதுவும் இல்லை. இந்தியா மற்றும் திபெத்தில் உள்ள இமயமலைக்கு முனிவர்களின் மீது ஏகபோக உரிமை இல்லை. ஒருவன் தனக்குள்ளேயே உள்ளதை அறிவதற்கு சிரமப்படவில்லையெனில் உடலை அங்குமிங்கும் கொண்டு செல்வதனால் அதைக் கண்டு பிடித்துவிட முடியாது. பக்தன் ஞானத்தை அடைய உலகின் எல்லைகளுக்குக் கூடச் செல்வதற்கு எப்போது தயாராகிறானோ அப்போது அவனுடைய குரு அருகிலேயே பிரசன்னமாகிறார்
காசி ஆசிரமத்தில் என் பிரார்த்தனையைத் தொடர்ந்து நான் ஸ்ரீ யுக்தேஸ்வரை ஒரு நெரிசலான சந்தில் சந்தித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு அவர் கூறியதை மௌனமாக ஒப்புக் கொண்டேன்.
ஓர் இடத்தில் கதவை மூடிக் கொண்டு தனிமையாக அமர்ந்து கொள்ள ஒரு சிறை அறை உனக்குள்ளதா?
ஆமாம். என்றேன்.
அதுதான் உன் குகை என்று கூறி அந்த யோகி என்மீது செலுத்திய ஒளி வீசிய பார்வையை நான் என்றுமே மறக்கவில்லை.
அதுதான் உன் புனிதமான மலை. அங்குதான் நீ இறைவனின் ராஜ்யத்தைக் காண்பாய்
அவரது எளிய சொற்கள் காலங்காலமாக என்னை ஆட்கொண்டிருந்த இமயமலை பற்றிய எண்ணத்தை அக்கணமே அழித்தது. கொதிக்கும் ஒரு நெல் வயலில் மலைகள் மற்றும் முடிவற்ற பனிச் சிகரங்கள் என்ற கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.
(தொடரும்...)
madrasdada@gmail.com
ReplyDelete