Wednesday, October 13, 2010

ஸ்ரீ அன்னை சொல்

உண்மையான தேவைக்கும் ஆசைக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.


உன்னுள் எதாவது ஒன்று ஒரு சிறு திவிரமான அதிர்வை உண்டாக்குகிறதென்றால் அங்கே ஆசையிருப்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

தேவையா ஆசையா என்று கண்டுபிடிக்க உன்னை மிக உன்னிப்பாகக் கவனித்து இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் “இந்தப் பொருள் கிடைக்காவிட்டால் என்ன நேரும்?” அதற்கு உடனடியாக, நிலைமை மோசமாகிவிடும் என்ற பதில் வந்தால் அது ஆசை என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம்.

ஓர் ஆசையை திருப்தி செய்வதில் பெறுவதைவிட அதை வெல்வதால் அதிக மகிழ்ச்சி பெறுகிறோம் என்று புத்தர் சொல்லியிருக்கிறார்.

திருப்தி செய்யப்படும்போது கசப்புணர்வைத் தராத ஆசையே இல்லை. இதுவே உண்மை. நீ மனப்பூர்வமாக முயன்றுபார்.

* நீ உனக்கே செய்து கொள்ள முடியாத நன்மையை உன்னால் பிறருக்குச் செய்ய முடியாது.

* யாரிடத்திலாவது ஒரு குறை இருக்கக் கண்டால் உன்னிடமும் அது இருக்கிறது என்பதை நீ நிச்சயமாகத் தெரிந்து கொண்டு, அதை மாற்றத் தொடங்கு. அதை மாற்றிவிட்டபோது பிறரிடத்திலும் அதைமாற்றுவதற்கு வேண்டிய பலம் உன்னிடத்தில் இருக்கும்.

* ஆன்மீக வாழ்விற்கும் ஒழுக்கத்திற்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது ஆனால் சாதாரண மக்கள் இவை இரண்டையும் ஒன்றொடொன்று குழப்பி விடுகின்றனர்.

ஒழுக்கம், எல்லோரும் தனது ஒரே இலட்சியமாகிய அச்சில் வார்க்கப்பட வேண்டுமென்றும் எல்லாம் விலக்கின்றி ஒரே மாதிரியாகவும் ஒரே விதமாகவும் செய்யப்பட வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றது.

ஒழுக்கம் தனது இவ்வளவு இறுகியதாகவும் உண்மைக்கு மாறுப்பட்டதாகவும் இருப்பதால் அது தனது கொள்கையிலும் நடைமுறையிலும் ஆன்மீக வாழ்விற்கு நேர் எதிராக உள்ளது.

ஆன்மீக வாழ்க்கையானது எல்லோரிடமும் சாரமாக உள்ள ஒரே மெய்ப்பொருளை வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே, ஆனாலும் அது அம்மெய்ப்பொருளின் முடிவற்ற வேறுபாடுகளை காட்டுகிறது. ஒருமையிலுள்ள பன்மைக்காகவும், அப்பன்மையின் பூரணத்திற்காகவும் வேலை செய்கிறது.

ஒழுக்கமோ வாழ்க்கையில் காணப்படும் வேற்றுமைக்கும், ஆன்மாவின் சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாயுள்ள ஒரு கற்பனை பிரமாணத்தை நாட்டுகிறது.

வளர்ச்சிக்கு இடமில்லாத வரம்புடைய ஒன்றை மனதால் கிருஷ்டித்துக் கொண்டு அதன்படி ஒழுக வேண்டுமென்று கேட்கிறது.

எல்லோரும் ஒரே விதமான குணநலன்களையும் ஒரே லட்சிய சுபாவத்தை பெறுவதற்கு எல்லோரும் உழைக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஒழுக்கம், மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதத்தன்மை கொண்டது.

நன்மை, தீமை என்னும் மாறாத பிரிவினையை மூலாம்சமாகக் கொண்டது. ஆனால் இது யதேச்சையான பாவணையாகும்.

வரம்புடைய விஷயங்களை எடுத்துக் கொண்டு வரம்பற்றவை போலத் திணிக்கிறது.

ஏனெனில் நன்மை, தீமை என்பவை வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கும், காலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்ப மாறுகின்றன.

சன்மார்க்க நெறிகள் ஆசைகளை நல்ல ஆசைகள், கெட்ட ஆசைகள் என்று பாகுபடுத்தி நல்ல ஆசைகளை மேற்கொள்ள வற்புறுத்துகிறது.

ஆனால் ஆன்மீக வாழ்க்கையோ ஆசைகளை அடியோடு விலக்கிவிட வேண்டுமெனக் கோருகிறது.

ஒழுக்கநெறி முற்றிலும் செயற்கையானது. கண்மூடித்தனமாக வற்புறுத்தப்படுகிறது. மிகச்சிறந்தவர்களுள் பெரும்பான்மையினர் விஷயத்தில் நான் சரியான பாதையில் செல்கிறேன். நான் ஒரு நாகரீக மனிதனாக நடந்து கொள்கிறேன். எல்லா வாழ்க்கை அறங்களையும் கடைப்பிடிக்கிறேன் என்பது போன்ற திருப்தியை அது கொடுப்பதனால் அவர்களுடைய உண்மையான முயற்சிக்கு அது தடையாக அமைகிறது. இவ்வாறு அவர்களுக்கு தங்களைப் பற்றி ஒரு திருப்தி ஏற்பட்டுவிடுவதால் அவர்கள் முன்னேறுவதில்லை. அதற்காக முயற்சி செய்வதும் இல்லை.

ஒழுக்க சீலனான ஒரு மனிதன் இறைவனை அடையும் பாதையில் செல்வது, மிகவும் அரிது.

No comments:

Post a Comment