Monday, October 18, 2010

அஹம் ப்ரம்மாஸ்மி

ஆற்றின் வெள்ளத்தின் சலசலப்பின் புதுவெள்ளத்தில் திளைக்க திளைக்க இடம் வலம் கீழ் மேலென்று கைகளையும் கால்களையும் அசைத்து தன் போக்கில் விளையாடிய பாலகனை காவித்துணியொன்று தேடிவந்து அணைகிறது.


முதலைவாய் சிக்குண்டவனாய் சிறுவன் துடிக்கிறான். காவி அவனை சுற்றிக் சூழ்ந்து நீரின் ஆழத்துக்குள் இழுக்கிறது.

ஆர்யாம்பாள் மூழ்கிக் கொண்டிருந்த மகனை பார்த்து துடித்தாள். தந்தையை இழந்த புதல்வன் அவனையாவது கடவுளே எனக்காக விட்டுவையும். அவனை உமக்கே தத்தம் தருகிறேன் என்று ஆற்றின் மணல்கள் எதிரொலிக்க நதியோட்டத்தில் கலக்க கதறினாள்.

காவியோடு பாலகன் யானை துதிக்கையால் தூக்கி எடுத்தது போல நீரிலிருந்து வெளிக்கிளம்பி கரை நோக்கி நடந்து வந்தான்.

ஆர்யாம்பாள் அவனது தேஜசையும் பொலிவையும் பார்த்து பூரித்து சாஸ்டாங்கமாக காலில் விழுந்து ஆதிசங்கரா என்று பாதத்தில் முத்தமிட்டாள். 25 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவை கால்நடையாக மூன்று முறை வலம் வந்து கிழக்கே வெளுப்பு, மேற்கே வெளுப்பு, தெற்கே வெளுப்பு, வடக்கே வெளுப்பு என்று திக்கெட்டும் பனிபோர்த்திய மலைகளின் நடுவே நின்று கூறினான் அஹம் ப்ரம்மாஸ்மி!

.................

இதுதான் ஜி.வி.அய்யரின் ஆதிசங்கராள சமஸ்கிருதப்படத்தில் சங்கரன்ள சந்நியாசம் பெற்ற காட்சி படமாக்கப்பட்டது.

கலைஞன் எதைவேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் சிந்தனையும் மொழியும் இவனது கலையின் உபகரணங்கள்.... ஆபத்தை சந்தித்துத்தான் இவர்கள் அந்தத்தளத்தின் ஆழத்துக்குச் செல்கிறார்கள் இது ஒரு பார்வையாளனின் வாழ்க்கையல்ல. இந்தக்கலை உண்மையின் கண்ணாடிகள்.

கல் குதிரை! பனிக்காலங்களில்

இதழில் புத்தரின் தோளில் கீறி டாவின்சி துப்பாக்கி ஒவியம் கட்டுரையில் கோணங்கி.

No comments:

Post a Comment