Wednesday, October 6, 2010

ஒரு காதல் கவிதை

விரி இதழ் தோறும்
மழைத்துளிகள் ஏந்தி
நின்றது ரோஜா

இருவரும் அருகே சென்றனர்

மழையின் கிளர்ச்சியில்
ரோஜா சிரிப்பென்றான்
அவன்

குளிரின் நடுக்கத்தில்
வெளியான
ரோஜா கண்ணீரென்றால்
அவள்

சற்று நேர
கனத்த அமைதிக்குப்பின்

வெவ்வேறு திசை நோக்கிச் செல்லும்
பேருந்துகளில்
இருவரும் பயணித்தனர்
தத்தம் வீடு நோக்கி
ரோஜா மறந்து

2 comments:

  1. அருமை மிகவும் நல்ல இருக்கு உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க வாங்க தோட்டத்துக்கும் http://tamilparks.nsguru.com

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க.

    /கண்ணீரென்றால்/
    கண்ணீரென்றாள்

    ReplyDelete