Tuesday, October 19, 2010

யோகியின் சரிதச் சிதறல்கள்

* உன் சக்தி வாய்ந்த மனது எதை நம்புகிறதோ அது உடனே நடக்கும்.

*நாம் தெய்வங்களை காணவில்லை எனில் அதன் காரணம் தெய்வத்தை நாம் நமக்குள்ளே இருத்தி வைக்கவில்லை உள்ளே இருப்பதைத்தான் வெளியே காண முடியும்.

*எதையும் சமநிலையில் பார்க்க வேண்டும் என்ற கொள்கை உடையவன் லாபத்தால் மகிழ்வதுமில்லை. நஷ்டத்தால் கலங்குவதுமில்லை.

இவ்வுலகில் மனிதன் வரும்போது சல்லிக்காசுகூட இல்லாமல்தான் வருகிறான். போகும் போதும் சல்லிக்காசு கூட இல்லாமல் தான் போகிறான்.

*சொற்களின் சக்தியை என்றும் தீங்கிழைக்க உபயோகிக்கக் கூடாது.

*ஆழ்ந்த மன ஒருமையுடன் உச்சரிக்கப்படும் சொற்களிலிருந்து வெடித்துக் கிளம்பும் அதிர்வலைகளின் ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கையை துன்பங்களிலிருந்து விடுவிக்கமுடியும்.

*தடை செய்யப்பட்ட ஆசைகளிலிருந்து தான் கோபம் பிறக்கும்.

*மனம் அமைதியாக இருக்கும் வேளைகளில் உள்ளுணர்வு ஆன்மாவின் வழிகாட்டுதலாக, மனிதனுக்குள் இயற்கையாகவே தோன்றுகிறது. அனேகமாக ஒவ்வொருவரும் விளக்க முடியாத வகையில், நிகழப் போவதைப் பற்றிய சரியான கணிப்பு ஏற்பட்ட அனுபவம் அல்லது தன் எண்ணங்களை அப்படியே மற்றவருக்கும் மாற்றிவிட்டிருக்கும் அனுபவம் அடைந்தே இருப்பர்.

*உண்மையை படைக்க முடியாது. ஆனால் கண்டறிய முடியும். மனிதனின் புரிந்து கொள்ளும் தன்மையின் குறைபாடுதான் எந்தவொரு தவறான எண்ணத்திற்கும் காரணமாயிருக்கிறது.

*யோக விஞ்ஞானத்தின் குறிக்கோள், மனத்தை அமைதிப்படுத்தி நெறிபிறழாத வகையில் நம் உள்ளிருக்கும் தெய்வீகக் குரலின் தவறில்லாத ஆலோசனையைக் கேட்கச் செய்யலாம் என்பதுதான்.

*நீ உன் சாதாரணப் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதிலேயே உறுதியாக நின்றால் தொடர்ந்து துரதிர்ஷடங்களையே சந்திப்பாய். இறைவனை அடைய முடியாது. உலக அனுபவங்களில்லாமல் உன்னால் பழைய கர்ம வினைகளை களையமுடியாது.

*போலித்தனங்களை களைந்தெரியும் வரை மனிதன் நிலையான மெய்ப்பொருளை கண்டறியவே முடியாது.

மேம்போக்கான மனிதர்கள்தான் தம் குறுகிய சொந்தத் துயரங்களில் மூழ்கி மற்றவர்களின் துயரைப் பற்றிக் கவலைப் படாமலிருப்பார்கள்.

*சத்தியத்தை தேடுபவர்களுக்கு இந்தியாவின் எழுதப்படாத விதிமுறை பொறுமைதான்.

*உடலின் பழக்கத்திற்கு மனம் இடம் கொடுக்காதவரை உடல் என்ன செய்யமுடியும். உடலின் ஆளுகைக்கு மனதை அடிமையாக விடாதே.

No comments:

Post a Comment